புதினா இலையை நாம் பிரியாணி, புதினா ரைஸ், சட்டினி போன்றவற்றிற்கு தான் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. அதை பற்றி நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.


புதினா இலையில் நீர் சத்து அதிகம் உள்ளது. அதனால் இதை வெயில் காலங்களில் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மிகவும் நல்லது. 


அஜீரண கோளாறுகளை விரட்டுவதில், புதினாவிற்கு முக்கிய பங்கு உண்டு. 


ஆண்மை குறைவை நீக்கி, இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க புதினா பயன்படுத்தப்படுகிறது. 


வாயு தொல்லையை அகற்றும் சக்தி கொண்டது.


மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 


புதினா இலை பசியை தூண்ட செய்யும். 


புதினா இலையை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்த பின்பு, அந்த தண்ணீரை குடித்து வந்தால் மூச்சு திணறல் நிற்கும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: