சென்னை:
குறை... எதுல குறை... நல்லா நடிக்கலையா... அழகா இல்லியா... நொந்து கொள்ளும் அட்டக்கத்தி நந்திதாவுக்கு அட்வைஸ் மழையாம்.


எப்படி சூப்பராக நடித்தாலும் பெரிய நடிகர்கள் ஜோடி போட அழைக்க மாட்டேங்கிறாங்களேன்னு அட்டக்கத்தி நந்திதா நொந்து போய் உள்ளாராம். புலி படத்தில கிடைச்ச வாய்ப்பை விடக்கூடாதுன்னு அந்த சில நிமிட கேரக்டரில் நடித்தார். 


அப்புறமா எந்த ஹீரோக்களுமே கண்டுக்கலை. காரணம் புரியாம தவிச்ச அவருக்கு சிலர் அட்வைஸ் மழை பொழியறாங்க... உங்களுக்கு எது மைனஸ் தெரியுமான்னு கேட்டு கேப் விட்டு உங்க  தெத்துப் பல்தான். அதை பர்ஸ்ட் சரி பண்ணுங்க... என்று சொல்றாங்களாம்.

அடப்பாவிங்களா... தெத்து பல்லுக்கும் வாய்ப்புக்கும் என்னப்பா சம்பந்தம். அதனால இப்ப பொண்ணு என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்காம். 


మరింత సమాచారం తెలుసుకోండి: