சென்னை:
நம்ம ஊரு பேரரசு படத்துக்க அழுகின தேங்காய் விருது கொடுத்து செமத்தியா கலாப்பு கலாச்சு இருக்காங்க...


ஆமாங்க நம்ம கோலிவுட்டுல ஊரு பேரை தலைப்பா வைச்சு நம்மள கொன்னு எடுத்த இயக்குனர் பேரரசு மலையாளத்தில உன்னிமுகுந்தனை வைச்சு எடுத்த படம்தான் சாம்ராஜ்யம்-2. இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்னாடி மம்முட்டி நடிச்ச சாம்ராஜ்யத்தின் அடுத்த பாகம்னு வேற செம பில்டப் கொடுத்தார் நம்ம ஆளு. 


இந்த படத்துக்குதான் கிடைச்சிருக்கு அழுகின தேங்காய் விருது. புதுசா இருக்கேன்னு பார்க்குறீங்களா? இல்லீங்க கேரளாவில் யூ டியூப் சேனல் ஒன்று இப்படி ஒரு விருதை அறிவிச்சு மொக்கை படத்துக்கு கொடுக்கிறது வழக்கம்.


ஆனா இந்த விருது சம்பந்தப்பட்டவர்களுக்கு கொடுக்க மாட்டாங்க. அறிவிப்புதான். மலையாள திரையுலகினருக்கு மட்டும் கொடுக்கப்படும் இந்த விருதை இப்ப அங்க போய் படம் இயக்கின பேரரசுவுக்கும் கொடுத்து செமத்தியா கலாய்ச்சிருக்காங்க... என்னப்பா... இப்படி பண்ணுறீங்களேப்பா.... 


మరింత సమాచారం తెలుసుకోండి: