சென்னை:
"தல"யுடன் நடித்தால் அவரிடம் உள்ள குணங்கள் மற்றவர்களுக்கும் ஒட்டிக்கொள்ளும் போல... இப்ப அவரை பார்த்து இவரும் இப்படி ஆகிட்டார்.


யார் தெரியுங்களா? மங்காத்தாவில் "தல"யுடன் அதகளம் செய்த ஆக்சன் கிங் அர்ஜீன் தான் அவர். தமிழ் சினிமாவில் பல ட்ரண்ட் விஷயங்களை கொண்டு வந்தவர் தல என்றால் மிகையில்லை.


நேச்சுரல் தோற்றத்தை மறைக்காமல் சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து கலக்கினார். இப்ப இந்த விஷயம் ஆக்சன் கிங்கிற்கும் ஒட்டிக்கொண்டு விட்டதாம். 


நிபுணன் படத்தில் தன் ஒர்ஜினல் லுக்கிலேயே அர்ஜீன் நடித்து வருகிறாராம். அதுமட்டுமா... எனக்கு வயதாகிவிட்டது. இனி மரத்தை சுற்றி ஓடும் டூயட் எல்லாம் வேண்டாம் என்று சொல்லியிருக்காராம். சூப்பர் ஆக்சன்...



మరింత సమాచారం తెలుసుకోండి: