சென்னை:
நீண்ட...ண்ட...ட... ஆண்டுகளுக்கு பிறகு உறவினர்கள் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகின்றனர் என்பதுதான் இந்த செய்தி. அந்த உறவினர்கள் யார் என்று தெரியுங்களா?


நடிகர் ரகுமானும், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் நெருங்கிய உறவினர்கள். 1999-ம் ஆண்டு ரகுமான் நடித்த 'சங்கமம்' படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். இதற்கு பிறகு இவர்கள் எந்த படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை.


இந்நிலையில் 17 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகுமான் 'துருவங்கள் 16' என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம். இந்த படத்தின் டிரைலர் வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.


இந்த டிரைலரை ஒரு பிரபலம்தான் வெளியிடுவார் என்று தகவல்கள் பரபரத்த நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் தான் அந்த டிரைலரை வெளியிடுகிறார் என்று அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.


ரகுமான் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: