சென்னை:
நாங்க பாடியிருக்கோம்.. நீங்க கேட்கணுமா... இன்னைக்கு... இன்னைக்கு கேட்கலாம் என்று தயாராகி வருது ரெமோ... எதற்கு தெரியுங்களா?


கபாலி பீவர் முடிந்துள்ள நிலையில் இப்போ ரெமோ பீவர் ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது. இந்த படத்தின் விற்பனையும் எக்குத்தப்பாக நடந்து வருகிறது. இதனால் படத்தை புரோமோட் செய்ய என்ன செய்யலாம் என்று யோசிச்ச படக்குழு அட்டகாசமான முடிவை எடுத்து இருக்காங்க....


என்ன தெரியுங்களா? ரெமோ படத்தின் புரமோஷனுக்காக சிரிக்காதே என்ற வீடியோ பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். இசை வேறு யாரு அனிருத் தான். வீடியோவில் சிவகார்த்திகேயனும், அனிருத்துமே தோன்றி பாடவும் செய்திருக்கிறார்கள்.


ஆசை தீர பார்க்கணும்னா, வெயிட் பண்ணுங்க. இன்னைக்கு (18 ந் தேதி) சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட இருக்காங்க... இருக்காங்க... பார்ப்போம்.. இந்த வீடியோ எவ்வளவு ஹிட் அடிக்குதுன்னு பார்ப்போம்...



మరింత సమాచారం తెలుసుకోండి: