'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் தற்போது விஜய் நடிக்கும் 'பைரவா' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், சதிஷ், டானியல் பாலாஜி, ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். 


இதன் பெரும்பாலான படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் புது நடிகை ஒருவர் நடித்து வருகிறார். சென்னையை சேர்ந்த மாடல் அழகி  திவ்யா தனபால் என்பவர் இந்த படத்தில் நடித்துள்ளார். 

திவ்யா தனபால்

dhivya dhanapal க்கான பட முடிவு


இவர் ஹீரோயின் கீர்த்தியின் தோழியாக, இந்த படத்தில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள காட்சிகள் அண்மையில் படமாக்கப்பட்டன. 


இதையடுத்து விஜய் படத்தில் நடித்த அனுபவத்தை அவர் அண்மையில் ஒரு பத்திரிக்கை சந்திப்பில் பகிர்ந்துள்ளார். அப்போது விஜய் மிகவும் எளிமையானவர். அவருடன் நடித்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. முதல் படத்திலே விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் கிடைத்ததை, பெரிய அதிர்ஷ்ட்டமாக கருதுகிறேன் என்று கூறினார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: