சென்னை:
இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வாங்கி தந்த பி.வி. சிந்துவிற்கு குவியும் பாராட்டுகளும், பரிசுகளும் ஒரு பக்கம் என்றால்... கோலிவுட் பிரமுகங்களும் அவரை பாராட்டு மழையில் நனைத்து வருகின்றனர்.


இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் பங்கிற்கு நான் உன் ரசிகன் என்று கூறி சிந்துவை மிகவும் பெருமைப்படுத்தி விட்டார். அண்ணா... நானும் இருக்கேங்ண்ணா என்று விஜய்யும், தன் சமூக வலைத்தள பக்கத்தில் சிந்துவிற்கு தன் வாழ்த்துக்களை கூறியுள்ளார். எப்படி தெரியுங்களா?


’உங்களால் நாடே பெருமையடைந்துள்ளது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் பல வெற்றிகளை படைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் புகழ் மாலைகள்... மறுபக்கம் பரிசு மழை என்று திக்குமுக்காடி வருகிறார் நம்ம வெள்ளி மங்கை சிந்து...


మరింత సమాచారం తెలుసుకోండి: