இயக்குனர் கே.வி.ஆனந்த் தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கிய நிலையில், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். 


இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது ட்விட்டர் வலைதள பக்கத்தில், 'ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் 18-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதத்தை முடித்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு வெளிவரும்' என பதிவு செய்துள்ளார். 


மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கிறார். நடிகரும், இயக்குனருமான தி.ராஜேந்தர் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்தின் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: