முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் மட்டுமே அதிமுக பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக அணிகள் இணைந்த பின்னர் முதன்முறையாக என்ன நடந்தது உள்கட்சி பூசலுக்கான காரணம் என்னஎன்பதை வெளிப்படையாக கூறியுள்ளார் டிடிவி.

தினகரன். சென்னை அடையாறில் நமது செய்தியாளர்களை சந்தித்த போது தினகரன் கூறியதாவது: பொதுச்செயலாளரால் முதல்வரான பழனிசாமிக்கு பதவியாசை பேயாய் பிடித்து ஆட்டுகிறது. துரோக சிந்தனையில் உள்ளவர் எப்படி நல்லதுக்கென்று தமிழக மக்களுக்காக செயல்பட முடியும்.

பொதுச்செயலாளர் நியமனமே செல்லாது என்று சொல்வதால் தான் அவரை எதிர்க்கிறோம்இரட்டை இலையை முடக்கக் காரணமான ஓ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் பதவி விலகினால் மட்டுமே பிரச்னைக்குத் ஒரு தீர்வு கிடைக்கும். எதிர் அணியில் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர், சரியான நேரத்தில் வெளியே வருவார்கள்ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்கள் தற்போது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தப் வழி பார்க்கிறார்கள், என்று தினகரன் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel