மலையாளத்தில் வெளியான நிவின் பாலி நடித்த 1983 திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த நிக்கி கல்ராணி, இத்திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய பல மொழிகளிலும் கால் பதித்து பல படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு முன்னரே இவரது அக்காவாகிய சஞ்சனா கலராணியும், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பரபரப்பான கவர்ச்சி நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. 



ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து பெயர்பெற்ற நிக்கி, அதனை தொடர்ந்து தமிழில் நடிக்க தொடங்கிய போது, தான் அறிமுகமாகிய டார்லிங் திரைப்படத்தில், க்யூட்டான பேயாக அனைவரையும் ஈர்த்தவர், அதற்கு பின்னர் மிதமான கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார். க்ரிஷ்ணாஷ்டமி தெலுங்கு படத்திலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்திலும் அளவான கவர்ச்சியில் கலக்கியவர், திடீரென யாரும் எதிர்பாரா வண்ணம், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மூலம் அதிரடி கவர்ச்சியில் குதித்தார். 



இப்படத்தில் வரும் மொட்ட சிவா பாடலிலும், ஆடலுடன் பாடலை கேட்டு பாடலிலும், முரட்டு குத்தாட்டதோடு, அதிரடி கவர்ச்சியில் தனது இடையழகையும், தொடையழகையும் காட்டி ரசிகர்களை ஈர்த்தார் நிக்கி கல்ராணி. இதனை தொடர்ந்து வந்த மரகத நாணயம் படத்தில் நடிப்பிலும் கவர்ந்த நிக்கிக்கு அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில், சுந்தர்.சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில் நடித்தார். 



கவர்ச்சியான வேடம் என்றாலும், சற்றே எடை கூடி இருந்ததாலும், கேத்தரின் தெரேசாவின் அதிரடி கவர்ச்சி ஆட்டத்தாலும், இப்படத்தில் இவரது கவர்ச்சி எடுபடாது போனது. இந்நிலையில், அவரது எடை குறித்து அனைவரும் குறை கூறிய நிலையில், நிக்கி ஜிம் நோக்கி படை எடுத்துள்ளதாகவும், விரைவில் எடையை குறைத்து, சிக்கென்ற தோற்றத்தில் கவர்ச்சி ஆட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் முடிவெடுத்து இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.



 முன்னணி தயாரிப்பாளர் ஒருவரின் திரைப்படத்தில், இளம் முன்னணி கதாநாயகன் ஒருவருக்கு ஜோடியாக நடிக்கும் திரைப்படத்தில், டூ பீஸ் பிகினி உடையில் நடிக்கும் காட்சி இருப்பதால், இந்த சிற்றிடை தோற்றம் மிகவும் முக்கியம் என கருதி, நிக்கி ஜிம்மே கத்தி என்று கிடப்பதாக கூறப்படுகிறது. ஜீவாவின் கீ, விக்ரம் பிரபுவின் பக்கா, மற்றும் பிரபு-பிரபுதேவாவின் சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணியை, விரைவில் வெள்ளித்திரையில் டூ பீஸ் பிகினி நீச்சல் உடையழகி நிக்கியாக காணலாம் என்று எதிர்பார்க்கப்படுத்திக்கறது. 



Find out more: