சென்னை:
இவருக்கு சைலண்ட் வில்லன்களாக மாறிவிட்டனர் பல தயாரிப்பாளர்கள்.


இயக்குனர் விஜய்யை விட்டு விலகிய பின்னர் அமலாபால் தற்போது தனியாக வசித்து வருகிறார். இவர் இப்படி செய்ததற்கு காரணமே சினிமாவில் தொடர்ந்து நடிப்பது தான் என்று காரணம் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழ் படங்களில் இவரை புக் செய்திருந்த தயாரிப்பாளர்களே தற்போது வில்லன் அவதாரம் எடுத்துள்ளனராம்.


என்ன காரணம் தெரியுங்களா? இயக்குனர் விஜய் மற்றும் அவரின் தந்தை இருவருக்குமே கோலிவுட்டில் நல்ல பெயர் உள்ளது. 
அவர்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு சங்கடம் ஏற்படுத்திவிட்டாரே இந்த அமலா பால், என இவருக்கு மறைமுக ரெட் போட்டுள்ளார்களாம் பல தயாரிப்பாளர்கள்.


இவரது நடிப்பிற்காக இவரை புக் செய்ய செல்லும் தயாரிப்பாளர்களுக்கும் போன் போட்டு வேண்டாம் என்று சொல்கிறார்களாம். இதை தெரிந்து ஏற்கனவே கன்னட படத்தில் திறமை காட்ட ஆரம்பித்துவிட்டார் அமலாபால். இருந்தாலும் தமிழ் தயாரிப்பாளர்கள் இப்படி தனக்கு வில்லன்கள் ஆவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவே இல்லையாம்....


Find out more: