திருச்சி:
நேற்று மாலை திருச்சியில் ஒரு சம்பவம் நடந்துச்சுங்க... என்ன தெரியுங்களா. அதிக உயரத்தில் பறக்காமல் ஒரு விமானம் திருச்சியை ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தது. 


எப்படி ஒரு முறை, இருமுறை அல்ல சுற்றி, சுற்றி வந்தது. வானத்தை அண்ணாந்து பார்த்த மக்கள் சரி ஏதாவது புதிய விமானி பயிற்சி எடுக்கிறார் போல் என்று விட்டுவிட்டனர். ஆனால் இந்த சுற்றல் அதிகரித்து கொண்டே இருக்கவே மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது.

தாழ்வாக பறந்த அந்த விமானம் ஏன் இப்படி பறந்து கொண்டே இருக்கிறது என்று தெரியாததால் அச்சத்தின் எல்லை உச்சத்தை அடைந்தது. இதற்கிடையில் விமான நிலையம் முன்பு மக்கள் கூடிவிட்டனர். பின்னர் தான் விஷயம் தெரிய வந்தது.


திருச்சி விமானநிலையத்தில் இருந்து ஏர் ஏசியா நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று மாலை 5.35 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு இருக்கு. ஆனால் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடிக்க மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முயற்சி செய்துள்ளார்.


ஆனால் அது முடியாததால் விமானம் திருச்சி வான் பகுதியிலேயே சுற்றி சுற்றி வந்துள்ளது. பின்னர் இரவு 7:35 மணியளவில் விமானம் தரையிறக்கப்பட்டது. விஷயம் இதுதான் என்ற பிறகே மக்கள் பெருமூச்சு விட்டனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: