விக்ரம் நடிப்பில், மாறுபட்ட கதையில் தற்போது 'இருமுகன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். ஷிபு தமீன்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 


இதில் விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. 


இந்நிலையில் இந்த படம் தணிக்கை குழுவினரிடம் இருந்து 'யு/ஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. முதல் தரமான 'யு' சான்றிதழை, இப்படம் பெறும் என்று எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது இரண்டாம் தரத்தை பெற்றுள்ளது. 


படத்தில் அதிகமாக வன்முறை காட்ச்சிகள் நிறைந்துள்ளதால், தணிக்கை அதிகாரிகள் இரண்டாம் தர சான்றிதழ் வழங்கியுள்ளனராம். 


மேலும் இப்படம் வரும் செப்டம்பர் 8-ந்தேதி வெளிவரும் என்று அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: