புதுடில்லி:
கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் நேற்று மாலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் வெகுவாக அச்சத்தில் உள்ளனர்.


கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா உட்பட நகரங்களிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வீதிக்கு ஓடி வந்தனர். பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.


மியான்மரை மையமாகக் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 பதிவாகி உள்ளது. நேற்று அதிகாலை இத்தாலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு 10க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிழக்கு இந்தியாவின் பல நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: