நடிகர் விஷால் தற்போது சூரஜ் இயக்கும் 'கத்தி சண்டை' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படம் இறுதிநிலையில் உள்ளது. இதையடுத்து மிஸ்கின் இயக்கவுள்ள புது படத்தில் நடிக்கவுள்ளார். 


இந்த படம் முடிந்ததும், அடுத்து அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகிறது. இதை விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளார். 


இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. என்ன தலைப்பாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.....தெரியவில்லையா.... 1960-ம் ஆண்டு பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் நடித்த 'இரும்பு திரை' திரைப்பட தலைப்பை இந்த படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர் என கூறப்படுகிறது. 



Find out more: