சென்னை:
ஒரு முகமா... இருமுகமா... இருமுகம்தான் என்று தகவல்கள் பரபரக்கின்றன.


முடிந்தது இருமுகன்... அடுத்தது கருடா என்று விண்ணில் பறக்க ஆரம்பித்து விட்டார் விக்ரம். ஆனால் இருமுகன் படத்தில் எத்தனை கெட்டப் என்பதை மட்டும் ரொம்பவே சஸ்பென்சாக வைத்துள்ளனர். அப்படியும் அப்படி... இப்படி என்று தகவல்கள் கசிந்ததில் இருமுகனில் இரண்டு விதமான கெட்டப்புக்களில் விக்ரம் அசத்தியுள்ளாராம்.


இதில் ஒரு கதாபாத்திரத்தில் விக்ரம் முகமூடி அணிந்து இருப்பது போல் நேற்று டீசர் வெளியாகி தகவல் உண்மை என்று சொல்லாமல் சொல்லிவிட்டது. இந்த டீசரில் விக்ரமின் அசைவுகளை பார்க்கும் போது கொஞ்சம் பெண் தன்மை கேரக்டர் போல் தெரிகிறது. அதனால் அவர் எப்படி நடித்துள்ளார் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: