தேசிய விருது இயக்குனர் பாலா 'தாரை தப்பட்டை' திரைப்படத்தை அடுத்து ஐந்து முன்னணி நடிகர்களான அரவிந்த் ஸ்வாமி, ராணா, ஆர்யா, அதர்வா, விஷால் ஆகியோர்களை வைத்து, நாவல் தழுவிய ஒரு புது  படத்தை இயக்க முடிவு செய்திருந்தார். 


ஆனால் ஒரு சில காரணங்களால், இந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அதற்கிடையில் அவர், இளம் ஹீரோ, ஹீரோயினை வைத்து ஒரு புது படம் இயக்க முடிவெடுத்துள்ளார். தற்போது இந்த படத்தின் கதாநாயகன், நாயகி குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. 


இந்த படத்தில் 'சாட்டை' திரைப்படத்தில், இளம் ஹீரோவாக நடித்த யுவன் ஹீரோவாகவும், விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் பங்கேற்ற ப்ரகதி ஹீரோயினாகவும்,  நடிக்க தேர்வாகியுள்ளனர். 

யுவன்

Image result for sattai hero yuvan


மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: