ஜிவி பிரகாஷ் தற்போது இயக்குனர் ராஜேஷின் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக ராஜேஷ் இயக்கும் திரைப்படங்களில், சந்தானம் தான் காமெடி ரோலில் நடிப்பார். ஆனால் தற்போது அவர் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருவதால்,  இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி காமெடி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். 


இந்த படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ்' சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.  இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 


இந்நிலையில் தற்போது வெளிவந்த உண்மை தகவலில், 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. 


நீங்கள் எதிர்பார்க்கிற மாதிரியான, காமெடி ரோலில் இல்லை... அவர் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளாராம். இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் நடைபெறும் என தெரிகிறது.


Find out more: