இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்கும் கனவு உலக கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக உள்ளது. இந்நிலையில் சச்சின் ஒரு தமிழருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அவர் கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.

நேற்று இந்தியா - இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்த சச்சின் தெண்டுல்கர், போட்டியை நேரில் காண கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வந்திருக்கும் செய்தியறிந்து சுந்தர் பிச்சை இருக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
click and follow Indiaherald WhatsApp channel