சென்னை:
ஒரு கண்ணில் சுண்ணாம்பா... வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர்களிடம் பாரபட்சமாக என்று கேட்டு விரைவில் தமன்னாவை காலி செய்ய கோலிவுட்டில் ஒரு சர்ச்சை உருவாக உள்ளது. 


விஷயம் இதுதான்! தமன்னா பாலிவுட், டோலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இப்படி தான் நடிக்கும் படங்களின்  விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.


அழகான உடை அணிந்து சிரித்த முகத்துடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார். ஆனால் தமிழ் படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வது இல்லை.


தமிழ் பட விளம்பர நிகழ்ச்சிகளை புறக்கணிக்கும் தமன்னா மீது தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கோபத்தில் உள்ளதாம். சுராஜ் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள கத்தி சண்டை படத்தின் நாயகி தமன்னா தான். 


இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தமன்னா கலந்து கொள்வாரா இல்லை வழக்கம் போன்று டிமிக்கி கொடுப்பாரா என்பதை பார்க்க காத்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். அதுக்கு பிறகுதான் தமன்னாவிற்கு ஆப்பு ரெடியாகும் என்கின்றனர் விபரமறிந்தவர்கள். தமிழில் தமன்னா நடிக்க தடை போட்டாலும் போடுவார்கள் என்று தெரிகிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: