சென்னை:
பிச்சைக்காரனின் நாயகிக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் என்று வதந்தி வசந்தாக்கா புட்டு புட்டு வைக்கிறார் தகவல்களை.


என்னன்னு பார்ப்போமா! இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் தமிழ், தெலுங்கில் என செம்ம வசூல் வேட்டை ஆடியது. 


இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர் சாட்னா டைட்டஸ். இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இவருக்குதான் ஒரு மாதத்திற்கு முன்பே ரகசிய திருமணம் நடந்திடுச்சாம்... நடந்திடுச்சாம். 


மாப்பிள்ளை யாரு என்று நினைத்தீர்கள. பிச்சைக்காரன் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸின் பங்குதாரர் கார்த்திக் என்பவராம். இருவீட்டார் சம்மதத்தோடு விரைவில் திருமணம் நடக்க இருக்காம். அப்போ... முன்னாடி நடந்த கல்யாணம்...அது ரகசிய கல்யாணம்.. இது ஊர் அறிய நடக்கும் கல்யாணம். கல்யாணத்திற்கு பிறகு சாட்னா படங்களில் நடிக்க மாட்டாராம். ரசிகர்களே சோகம் வேண்டாம்... இந்த சாட்னா... இல்லாட்டி வேறு ஒரு பாட்னா வருவாங்க...



Find out more: