தல  நடிப்பில் உருவாகி வரும் ‘விவேகம்’ படத்தின் இரண்டாவது லுக் விரைவில் வெளியாகவுள்ளது. ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘விவேகம்’ படத்தின் பர்ஸ்ட்லுக் சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதில் காணப்பட்ட அஜீத்தின் சிக்ஸ் பேக் உடலமைப்பு அதிக வரவேற்பையும், அதேசமயம் பிடிக்காதவர்கள் மத்தியில் கிண்டலுக்கும் சர்ச்சைகளுக்கும் ஆளானது. முக்கியமாக, அஜீத்தின் சிக்ஸ்பேக் உண்மை இல்லை, அது கிராபிக்ஸ் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

Image result for ajith vivegam

இந்நிலையில், ‘விவேகம்’ படத்தின் இயக்குநரான சிவா “அஜித்தின் உடலமைப்பு கிராபிக்ஸ் அல்ல. உண்மையிலேயே அஜீத் மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கியது.” என்று தெரிவித்துள்ளார். மற்றும் டிரைலருக்கு முன்னதாக, ‘விவேகம்’ படத்தில் அஜித்தின் இன்னொரு லுக்கையும் விரைவில் வெளியிட உள்ளனர்.

Image result for ajith vivegam

விவேகம் படத்தை ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிர்வாகம். எப்பொழுதும் வியாழக்கிழமைகளில் வெளிவரும் செண்டிமெண்ட் இதிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..


మరింత సమాచారం తెలుసుకోండి: