மோகனா படத்தில் முத்தக் காட்சியில் நடிக்க மறுத்து ஹீரோயின் வெளிப்படையாக கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் ஹீரோவாக நடித்துள்ள படம் மோகனா. காமெடி படமான இதில் வித்தியாசமான காமெடி வில்லனாக வருகிறார் மொட்டை ராஜேந்திரன். பவருக்கு ஜோடியாக கேரளாவை சேர்ந்த கல்யாணி நாயர் என்னும் புதுமுக நடிகை நடித்துள்ளார்.

கதைப்படி கல்யாணி நாயரின்(ஹிரோயின்) பெயர் தான் மோகனா. படத்தில் அவர் நாடக நடிகை. அவர் மீது பவர் ஸ்டாருக்கும், ஊர் பண்ணையாரான மொட்டை ராஜேந்திரனுக்கும் முக்கோண காதல் வருகிறது.

மொட்டை ராஜேந்திரனின் கனவில் ஹீரோயின் வந்து முத்தம் கொடுக்கும்படி காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குனர். இதற்கிடையே தனக்கு அதேப் போல் முத்தக் காட்சி வேண்டும் என்று பவர் அடம்பிடித்துள்ளார்.
முத்தக் காட்சியில் நடிக்க மறுத்துள்ளார் கல்யாணி. செட்டில் இருந்து திடிர்ரென்று காணாமல் போய் ஒரு அறையை பூட்டிக் கொண்டு கதறி அழுதுள்ளார். இதை பார்த்த இயக்குனர் முத்தக் காட்சியே இல்லம்மா என்று சமாதானம் கூறிய பிறகே மீண்டும் நடிக்க வந்துள்ளார் கல்யாணி.
.
click and follow Indiaherald WhatsApp channel