முடி கொட்டுவதை சரி செய்ய சில இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம். அவை என்னென்ன என்பதை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம்.


1. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து, அதை தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.


2. சிவப்பு செம்பருத்தி பூவை அரைத்து, அதை தேங்காய் எண்ணையுடன் கலந்து, தலைக்கு தடவி வந்தால், முடி கொட்டாது. கருமையாக மாறும்.


3. முட்டையின் வெள்ளை கருவை தலைக்கு தடவி, 10 நிமிடம் கழித்து, சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.


4. முடக்கத்தான் கீரையை அரைத்து, தலையில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்.மேலும் இதை வாரம் ஒரு முறை வைத்து, மூன்று மாதம் பின்பற்றி வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: