விவேகம், மெர்சல் பற்றி ட்வீட்டி அவர்களின் ரசிகர்களிடம் செம திட்டு வாங்கியுள்ளார் காயத்ரி. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு நாளான பிறகும் பார்வையாளர்களுக்கு காயத்ரி ரகுராமை பிடிக்கவில்லை. நான் ஒன் மேன் ஆர்மி என்று ட்வீட்டி ஓவியா ஆர்மியிடம் வாங்கிக் நன்றாகக் கட்டிக் கொண்டார் காயத்ரி.

இன்று தல, தளபதி பற்றி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார் காயத்ரி. இன்று மாலை விவேகம் படத்தை பார்க்கப் போவதாக ட்விட்டரில் குஷியாக தெரிவித்துள்ளார் காயத்ரி. அதை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகி திட்டத் துவங்கிவிட்டனர். காயதர்யின் ட்வீட்டை பார்த்த ரசிகர் ஒருவர் தயவு செய்து பார்த்து போங்க... இல்லன்னா...

செஞ்சிருவாங்க என்று கமெண்ட் கிண்டலாக போட்டுள்ளார். விஜய் அண்ணா பேரை சொல்லி எஸ்கேப் ஆக முடியாது காயத்ரி என்று தளபதி ரசிகர்கள் காயத்ரியை செமையாக வறுத்தெடுத்துள்ளனர். சிலரோ உங்க வயசுக்கு விஜய் அண்ணாவா என்று வசமாக கேட்டுள்ளனர்.
click and follow Indiaherald WhatsApp channel