நடிகை த்ரிஷா கொடி மற்றும் அரண்மனை 2 படங்களை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் நடித்து வெளியாக உள்ள படம் தான் மோகினி. இந்த படத்தில் த்ரிஷா ரெட்டை வேடங்களில் நடித்துள்ளார். வைஷ்ணவி என்ற பைவ் ஸ்டார் ஹோட்டல் செப் ஆகவும் மோஹினி என்ற பேயாகவும் இரண்டு கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார்.பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் பழி வாங்கும் படலத்தை அறிவியல் ரீதியான ஒரு கோணத்தில் செய்து காட்டுவது தான் இந்த படத்தின் திரைக்கதை. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழிலும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.ஆந்திராவில் கிட்டத்தட்ட அறுநூறு திரையரங்குகளில் மோகினி வெளியாக உள்ளது. ஜுலை இருபத்தி ஏழாம் தேதி வெளியாக உள்ள மோகினி படம் விஜய் சேதுபதி நடிக்கும் காமெடி டான் படமான ஜூங்காவுடன் மோத உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: