
த்ரிஷாவுக்கும் அதுவே கனவாகவும் இதனை நாட்களாக எட்டா தனியாகவும் இருந்து வந்தது. சந்திரமுகி படத்திலேயே த்ரிஷா தான் சூப்பர்ஸ்டாரின் ஜோடியாக ஆகியிருக்க வேண்டியது ஆனால் அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு போனது. சாமி வெற்றி விழாவின் பொது த்ரிஷாவை பாராட்டியதால் எப்படியும் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த த்ரிஷாவுக்கு சிவாஜியில் பல்லேலக்கா பாடலில் ஆட வாய்ப்பு கிடைத்தும் அது மிஸ் ஆகி அதுவும் நயனுக்கு போனது.

சமீப காலமாக ராதிகா ஆப்டே, ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி என பிரபலமாகாத நாயகிகள் எல்லாம் ரஜினியோடு ஜோடி போட்டு வந்த நிலையில் ரஜினியின் அடுத்த படமான கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிவரும் த்ரில்லரிலும் சிம்ரன் தான் ஜோடி என அறிவிக்கப்படவே த்ரிஷா ரசிகர்கள் நொந்தனர்.

ஆனால் அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக இன்று சன் பிக்ச்சர்ஸ் த்ரிஷா ரஜினியின் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து த்ரிஷாவும் இந்த செய்தியை பகிர்ந்து "சில நேரங்களில் நீங்கள் தூக்கத்தில் இருந்து எழுந்த பின்னும் கனவில் இருப்பது போல உணர்வீர்கள், சிறந்த திங்கட்கிழமை, கடவுளின் செல்லப்பிள்ளை, என் வட்டம் முழுமையடைந்து" என்று பதிவிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel