சென்னை:
சதம் அடிக்காம விடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது... என்ன இந்திய கிரிக்கெட் குழுவா என்று கேட்காதீர்கள். இது சென்னை விவகாரம்.


ஒரு முறை அல்ல... இருமுறை அல்ல... அரை சதம் கடந்து கண்ணாடி விழுந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் சென்னை விமானநிலையத்தில் தொடர்கதையாகி வருகிறது. இது தற்போது 65வது முறையாக நடந்துள்ளது.


சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் 65வது முறையாக 17வது நுழைவு வாயிலில் இருந்த கண்ணாடி உடைந்துள்ளது. இந்த விபத்தில் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படியே தொடர்ந்து நடந்தால் என்ன செய்வது.



Find out more: