கன்னட நடிகை ராஷ்மிக்கா மந்தனா கன்னடத்தில் கிரீக் பார்ட்டி வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் கால் பதித்தார். சலோ படம் ஹிட் ஆனதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் பல பட வாய்ப்புகள் குவிந்தன.இதனை அடுத்ததாக அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த பேமிலி ரொமான்டிக் படமான கீதா கோவிந்தம் படம் பல நூறு கோடிகள் வசூல் செய்து ராஷ்மிக்கா மந்தனாவை டாப் ஹீரோயின் ஆக்கியது.இதன் பின்னர் தான் வந்தது நாகார்ஜூனா மற்றும் நானியுடன் சேர்ந்து நடித்த தேவதாஸ். இந்த படமும் ஹிட் ஆகவே ரஷ்மிக சம்பளம் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் பெரிதாக சம்பளம் ஏற்றாமல் அடுத்ததாக நிதின் ஜோடியாக பீஷ்மா படத்தில் நடித்து வருகிறாராம் ராஷ்மிக்கா. 


Find out more: