நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23ஆம் தேதி என்ற நிலையில் விஷாலின் பாண்டவர் அணி, பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணி வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் வழக்கு ஒன்றில் ஆஜரான செயலாளர் விஷால் பேட்டியளித்தபோது, ரஜினி, கமல் ஆதரவு இருப்பதாக பாக்யராஜ் கூறியது குறித்த கேள்விக்கு, ரஜினி, கமல் இருவரும் ஆதரவு அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடும் வரை வதந்தியாகத்தான் எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் ரஜினி, கமல் இருவரையும் சந்தித்து என்ன செய்தோம், என்ன செய்யவிருக்கிறோம் என தெரிவிப்பது வழக்கம், இருவரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா என்று விஷால் கூறினார்.
click and follow Indiaherald WhatsApp channel