இயக்குநர் *மோகன்ராஜா* பேசியதாவது,

 

"ரொம்ப உணர்ச்சிப் பூர்வமான அனுபவம். இந்த மேடையில் நான் நிற்க காரணம் என் மகன். அவன் இப்படத்தில் நடிகனாக அறிமுகமாகிறான். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பத்திரிகையாளர்கள். எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்துள்ளீர்கள். அதுபோல் என் மகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விஜய் ஆண்டனி வாடா போடா என்று பழகும் அளவிற்கு நட்பு உள்ளவன். விஜய் ஆண்டனி என் மகனை நடிக்க கூப்பிட்டார். மேலும் இளையராஜா இப்படத்திற்கு இசை அமைக்கிறார் என்றும் சொன்னார். இதைவிட என் மகனுக்கு பெரிய பெருமை இருக்க முடியாது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது" என்றார்.

 

நடிகர் *ரோபோ சஙகர்* பேசியதாவது,

 

"இந்த வருடத்தின் இது கடைசி ஞாயிறு. அப்படியான ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கோவில் வளாகத்தில் வைத்து இசை வெளியீட்டு விழா நடத்துவது சிறப்பு. அதற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இன்றைய கதாநாயகர் இளையராஜா சார் தான். நான் நடித்துள்ள படத்திற்கு அவர் இசை அமைத்துள்ளார் என்பது எனக்குப் பெரிய பெருமை..விஜய் ஆண்டனி சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் அசத்தி விடுவார். மோகன்ராஜா மகனுக்கு இப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டர். அவன் சிறப்பாக நடித்துள்ளான். இப்படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்" என்றார்.

 

தயாரிப்பாளர் இயக்குநர் *சுரேஷ்காமாட்சி* பேசியதாவது,

 

"இளையராஜா அவர்களின் பாடல்களைப் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இந்தப்படத்திலும் எப்படியும் சிறப்பாக செய்திருப்பார். விஜய் ஆண்டனி ஒரு சுயம்பு வாக வளர்ந்து வருகிறார். அவர் பெரிதாக ஜெயிக்க வேண்டும். தயாரிப்பாளருக்கு வாழ்த்துகளையும் ..விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

 

தயாரிப்பாளர் *பெப்சி சிவா* பேசியதாவது

 

"பத்திரிகை நண்பர்களுக்கும் மேடையில் இருப்பவர்களுக்கும் முதல் நன்றி. நான் பெப்சி சிவா ஆக மாறுவதற்கு ஒத்துழைப்பு தந்த பத்திரிகை நண்பர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்றி.பாரதிராஜா எனக்கு எல்லா நேரத்திலும் உதவியாக இருப்பவர். பி.ஆர்.ஓ மெளனம் ரவி என் ஆத்மார்த்தமான நண்பர். அவர் மூலமாக எனக்கு நிறைய மீடியா நண்பர்கள் கிடைத்தார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. இந்தப்படத்தை என் மனைவி தான் தயாரிக்கிறார். அவர் சார்பாக மெளனம் ரவி அவர்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இந்தபடத்தின் பாடல்கள் இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு முழுவதும் பேசப்படும். அந்தளவிற்கு அவரின் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. விஜய் ஆண்டனி தான் என்னை தைரியப்படுத்தி இப்படத்தை தயாரிக்க வைத்தார். இந்த முழுப்படத்திலும் அவருடைய பங்களிப்பு மிக அதிகம். தயாரிப்பாளராக என் மனைவி உருவாகி இருந்தாலும் பைனான்ஸியர் உத்தவ், விஜய் ஆண்டனி இருவரும் ஆற்றிய பங்கு மிக அதிகம். இதனிடையே 2000 பேர்களுக்கு அன்னதானம் செய்துவிட்டு தான் இந்த விழாவை துவங்கியுள்ளோம். இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள, வானதி ஸ்ரீனிவாசன், பொன்.ராதாகிருஷ்ணன், ராதாரவி உள்பட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப்படம் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும். ஏன் என்றால் இந்தப்படத்தில் எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது" என்றார்

 

நடிகர் *ராதாரவி* பேசியதாவது,

 

"பெருந்தலைவர் காமராஜருக்குப் பிறகு ஒரு உன்னதமான மனிதர் என்றால் அது பொன்னார் மட்டும் தான். அவர் தான் என்னை இங்கு அழைத்து வந்தார். சொல்ல முடியாது அவரே பி.ஜே பி தலைவராக வந்தாலும் வருவார். சகோதரி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தது சந்தோஷம் என்றார். இந்திப்பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த மக்களை தமிழ்பாடல்களை கேட்க வைத்தவர் இளையராஜா. இவர் நல்லா என்னை கெடுத்துவிட்டார். அவர் எனக்கு இசை அமைத்த பூவே செம்பூவே என்ற பாடல் ரொம்ப பிரபலம். இயக்குநர் இமயத்திடம் நடிக்க நிறைய வாய்ப்பு கேட்டிருக்கேன். இப்ப அவர் நடிக்க வந்துட்டார். விஜய் ஆண்டனி நல்ல நண்பர். அவர் இப்படியான படங்கள் தான் செய்ய வேண்டும். நான் பிச்சைக்காரன் போன்ற படங்கள் தான் அவருக்கு செட் ஆகும். அப்படி வரிசையில் தமிழரசன் படமும் இருக்கும். இந்த விழாவை வாழ்த்துக்கூடிய ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். நான் வெளிநாடு சென்ற போதும் என்னை ஒர்க் பெர்மிட் இல்லை என்று துரத்தி விட்டார்கள். அதைத் தான் இப்போது நம் நாட்டில் குடியுரிமைச் சட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். இங்கிருக்கவனை வெளியிலேப் போகச் சொன்னாதானய்யா பிரச்சனை. இது கூட தெரியவில்லை. நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள். அதுதான் இப்படம். அதைத்தான் இந்தப்படம் சொல்கிறது. தயவுசெய்து இப்படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்" என்றார்

 

நடிகர் *விஜய் ஆண்டனி* பேசியதாவது,

 

"இன்னைக்கு நான் ஒரு மியூசிக் டைரக்டரா அகி, நடிகனாக இருக்கிறேன் என்றால் அதுக்கு காரணம் இளையராஜா. அவர் ஆயிரம் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.  அவர் ஒரு இசை அமைப்பாளருக்கு இசை அமைத்திருப்பது இதுதான். இந்தத் தயாரிப்பாளர் சிவா சாரைப் பார்க்க பயமாக இருக்கும். அவர் நிறைய செல்வு செய்யக்கூடியவர். நிறைய பெரிய நடிகர்களை நடிக்க வைத்துள்ளார். இந்தப்படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார் இயக்குநர். அவர் பெரிய இயக்குநராக வருவார். மோகன்ராஜா மகன் சிறப்பாக நடித்துள்ளான். இந்தப்படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். பாருங்கள்"

మరింత సమాచారం తెలుసుకోండి: