சென்னை வியாசர்பாடியில், மாமூல் தரலைன்னு மெக்கானிக் ஒருவரை ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வியாசர்பாடியில், பிரபு என்பவன் தலைமையில் 10 பேர் ஹரி என்பவரின் மெக்கானிக் கடைக்குச் சென்று மாமூல் கேட்டு இருக்காங்க. அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவிச்சு இருக்கார். இதனால் டென்ஷனான அந்த கும்பல் அவரை அரிவாளால் வெட்டியது.
அதுமட்டுமா? போதை தலைக்கு ஏற அந்த கும்பல் சாலையில் நடந்து சென்ற தமாகா மாணவர் அணி துணை செயலாளர் தீபக் என்பவரையும், ராஜ்குமார் என்பவரையும் சம்பந்தமில்லாமல் வெட்டியதுதான் கொடுமையிலும் கொடுமை. 3 பேரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த கும்பலை போலீசா தேடி வருகின்றனர். இதுபோன்ற அட்டூழியங்களை இந்த ரவுடிக்கும்பல் செய்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.