அமெரிக்கா:
அமெரிக்காவில் கறுப்பு இனத்தவரை போலீசார் சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் கலவரத்தில் கொண்டு வந்து முடித்துள்ள நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. 


கறுப்பு இனத்தை சேர்ந்தவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு பிறகு அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெண் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து விட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவ... உடனடியாக நாடாளுமன்றம் மூடப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


ஆனால் அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. இருப்பினும் கருப்பினத்தவர் பிரச்னை அமெரிக்காவில் தீவிரமடைந்து வருவதால் பதற்றம் உருவாகி உள்ளது.


Find out more: