மலையாள திரை உலகில் என்னு நிண்டே மொய்தீன், குப்பி, ஒரு மெக்சிகன் அபாரதா, கோதா போன்ற பல படங்களில், தனது இயல்பான நடிப்பாலும், அழகிய தோற்றத்தாலும்  மலையாள திரை ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் டோவினோ தாமஸ். சமீபத்தில், ஆஷிக் அபுவின் இயக்கத்தில் மாயாநதி திரைப்படத்தில் தோன்றிய டோவினோ, அதுததாக தமிழ் திரையுலகிலும் காலடி எடுத்து வைக்கவிருக்கிறார். 



இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு கவுதம் மேனனின் இயக்கத்தில் வெளியான 'உலவிரவு' இசை வீடியோவில் டிவி தொகுப்பாளினி டிடியோடு நடித்திருந்தார். இதனை பற்றி டோவினோ கூறுகையில், "நான் முதலில் கவுதமை ஒரு விமான பயணத்தில் தான் சந்தித்தேன். அப்போது அவர், எனது படங்களை பார்த்துள்ளதாகவும், விரைவில் என்னோடு பணிபுரிய விரும்புவதாகவும் கூறினார். நானும் உடனே ஒப்புக்கொண்டேன். ஆயினும் அத்திரைப்படம் உருவாக இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில்,  திடீரென என்னை அழைத்த கவுதம், தனது புதிய இசை வீடியோவில் நடிக்க முடியுமா என்று என்னை கேட்டார். நானும் உடனே ஓகே சொல்லி, சென்னை விரைந்தேன். 




ஒட்டுமொத்த படக் குழுவும் மிகவும் ஜோவியலாக பழகக் கூடியவர்கள். என்னை ஒரு விருந்தாளியை உபசரிப்பது போல மிகவும் மரியாதையுடன் ,பண்புடனும் நடத்தினர். என்னிடம் வேலை வாங்கிய கவுதமை பார்த்து, அவர் எப்படி நடித்து காட்டினாரோ அப்படியே தான் நான் திரையில் செய்தேன். ஒட்டுமொத்த படக் குழுவில் என்னோடு மிகவும் இனிமையாக பழகியவர் என்றால், அது டிடி தான். உலவிரவு பாடலில் நானும் டிடியும் நெருக்கமான காட்சிகளில்  இணைந்து நடிக்க வேண்டியிருந்ததால், முதலில் என்னை வசதியாக பார்த்து கொண்டு ,என்னை அப்பாடலில் நடிக்க தயார் படுத்தியவர் டிடி தான். உலவிரவு பாடலில் நடித்தது ஒரு இனிமையான அனுபவம்" என்றார் டோவினோ தாமஸ். 




இப்பாடலில் டிடியும் டோவினோவும் மிகவும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. டோவினோ , அடுத்ததாக தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகனின் இயக்கத்தில் மாரி 2 படத்தில் வில்லனாகவும், கவுதமின் ஒன்றாக (விண்ணைத்தாண்டி வருவாயா 2) படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராகவும் தமிழில் நடிக்கவுள்ளார். 



మరింత సమాచారం తెలుసుకోండి: