விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றால் தனது கதாபாத்திரத்தில் மட்டும் தான் கண்ணும் கருத்துமாக இருப்பார். அமைதியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டே, டேக் என்றதும் நடித்து பட்டையை கிளப்புவார்.

தமிழன் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் செய்த ஒரு பாராட்டபட வேண்டிய விஷயம் தற்போது வெளிவந்துள்ளது, இப்படத்தில் தான் பாலிவுட்டின் முன்னணி நாயகி ப்ரியங்கா சோப்ரா முதன் முதலாக அறிமுகமானார்.

இதில் ப்ரியங்கா சோப்ரா ஒரு பாடலை பாடியிருப்பார், இந்த பாடலை பாட வலியுறுத்தியதே விஜய் தானாம்.
ப்ரியங்கா படப்பிடிப்பில் யதார்த்தமாக கொஞ்சும் குரலில் பாட, அதை கவணித்த விஜய் உடனே இமானிடம் சொல்ல பாட வைத்துள்ளார்.
தற்போது ப்ரியங்கா ஹாலிவுட் படத்தில் பரபரப்பாக நடித்து புகழ் பெற்று வருகின்றார், அது மட்டுமின்றி பல ஆல்பங்களை பாடி வெளியிட்டுள்ளார் என்பது விஜயால் தான் என்று குறிப்பிடத்தக்கது.
click and follow Indiaherald WhatsApp channel