காஷ்மீர்:
சுதந்திர தின கொண்டாட்டம் நாட்டின் அனைத்து பகுதியிலும் நடந்து கொண்டிருக்க ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று ரோந்து படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளியாகி உள்ள செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ரோந்துப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள் காயமடைந்தனர். இச்சம்பவம்தான் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இன்று காலை ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பநீநகர் மாவட்டத்தில் உள்ள ஷேக்-ரி-காஸ் பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது நவ்ஹாட்டா என்ற இடத்தில் மறைந்திருந்த சில தீவிரவாதிகள் ரோந்துப்படை வாகனத்தின் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டனர்.


இதில் மத்திய பாதுகாப்பு படையை சேர்ந்த 7 வீரர்கள் காயமடைந்ததாகவும், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் பநீநகரில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


మరింత సమాచారం తెలుసుకోండి: