நடிகர் கார்த்தி சென்ற ஆண்டு வெளியான காற்று வெளியிட படத்தின் தோல்விக்கு அடுத்து அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் கொடுத்து கம்பேக் கொடுத்து விட்டார். போலீஸ் அதிகாரியாக நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படமும் சரி இந்த ஆண்டு வெளியான கிராமத்து குடும்ப படமான கடைக்குட்டி சிங்கம் படமும் சரி, எதிர்பார்த்ததை விட பெரிய அளவில் ஹிட்டான படங்கள் ஆகும்.



இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஜோடியாக தேவ் படத்தில் அவர் நடித்து வருகிறார். தேவ் வெளியாகும் முன்னரே அடுத்த படமும் தொடங்கி விட்டார்.



மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் கார்த்திக்கு ஹீரோயின் இல்லை. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்டது. இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கவுள்ளார்.  


మరింత సమాచారం తెలుసుకోండి: