ஸ்காட்லாந்த்:
குடிச்சு இருக்கியா... குடிச்சு இருக்கியா... போ... உள்ளே போ... என்று சிறைக்கு அனுப்பி உள்ளனர் அதிகாரிகள்.


என்ன விஷயம்ன்னா... ஸ்காட்லாந்தில் இருந்து நியூயார்க் புறப்பட இருந்த விமானம் ஒன்று ரெடியாக இருக்க... இயக்க வந்தாங்க பைலட்டுகள்.... எப்படி? குடிபோதையில்... அடப்பாவிங்களா... உங்களை நம்பி பயணிகளை அனுப்புவதான்னு... அதிகாரிகள் டென்ஷனாகி அந்த 2 பைலட்டையும் சிறைக்கு அனுப்பிட்டாங்க.  


அந்த விமானம் அமெரிக்க ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம். அதில் எத்தனை பயணிகள் இருந்தாங்க தெரியுங்களா? 141 பேரு. இத்தனை பேரையும் பாதுகாப்பாக அழைச்சுக்கிட்டு போற பைலட்டுகள் 2 பேரும் "டைட்"டாகி வர... விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஸ்டார்ட் ஆகி இருக்கு. 


விசாரிச்சப்ப லைட்டா போட்டு இருக்கோம்னு சொல்ல... ஆனால் அவர்கள் இருவரும் டைட்டாக இருந்ததால் அண்ணே... நீங்க போக வேண்டியது விமானத்துக்கு இல்ல... சிறைக்குன்னு அனுப்பிட்டாங்க.


அப்புறம் என்ன வேறு பைலட்டுகள் வர விமானம் புறப்பட்டு போயிருக்கு.


Find out more: