பீஜிங்:
சீனாவில் டிரைவர்களே இல்லாமல் ரயில்களை இயக்கக்கூடிய தானியங்கி சுரங்க ரயில் பாதையை அறிமுகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாம்.


சீனா தலைநகரான பீஜிங்கில் சுரங்கப்பாதை ரயில்களின் இயக்கங்களை டிரைவர் இல்லாமல் தானியங்கியாக மாற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டது.


இதில் முதற்கட்டமாக யான்பாங் தடத்தில் இதற்கான பணிகளை சீனா ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதியில் இப்பணிகள் முடிவடைந்து செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ரயிலின் புறப்படறது, கதவுகளை திறந்து, மூடறது என எல்லாமே  தானாகவே நடைபெறும். இந்த பணிகளை செய்வதற்கு ஊழியர்கள் யாரும் இனி தேவையில்லை. இந்த ரயில்களில் உள்நாட்டு தொழில்நுட்பம் மட்டுமே பயன்படுத்த இருக்காங்களாம்.


பீஜிங்கில் உள்ள சில ரயில்களுக்கான வழித்தடங்களையும், விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளையும் முழுவதும் தானியங்கியாக மாற்றும் பணிகள் 2020ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்ப இனி எல்லாமே தானியங்கி செயல்பாடுதான். 



Find out more: