'ஜாக்சன் துரை' திரைப்பட வெற்றிக்கு பின்பு, சிபி சத்யராஜ் தற்போது 'கட்டப்பாவை காணோம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் அறிவழகனிடம் உதவியாளராக பணிபுரிந்த மணி சேயோன் இயக்குகிறார். 


இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். பாஹுபலி திரைப்படத்தில் சத்யாஜின் 'கட்டப்பா' பெயரை, இந்த படத்திற்கு தலைப்பாக 'கட்டப்பாவை காணோம்' என்று வைத்துள்ளனர். 


இதில் கட்டப்பா யார் தெரியுமா? வேறு யாருமில்லை, வாஸ்து மீனின் பெயர் தான் கட்டப்பாவாம். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


மேலும் விஜய் சேதுபதி, அவர் நடித்திராத திரைப்படத்திற்கு டப்பிங் பேசவுள்ளது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


మరింత సమాచారం తెలుసుకోండి: