சென்னை:
சென்னைக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகத்துக்கு வந்தார் ஜனாதிபதி. நேற்று காலை புதுடில்லியில் இருந்து தனி விமானத்தில் கோவைக்கு வந்த அவர்அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் சென்றார்.


அங்கு நடந்த ராணுவ விழாவில் கலந்துகொண்டு அங்கிருந்து தனி விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


தமிழக கவர்னர்வி த்யாசாகர் ராவ், தலைமை செயலாளர், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, மாபா பாண்டியராஜன், சென்னை மேயர் சைதை துரைசாமி மற்றும் முப்படை அதிகாரிகள், டி.ஜி.பி., கமிஷனர், முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜே.எம்.ஆரூண், காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்த் குமார் என ஏராளமானோர் திரண்டு வந்து ஜனாதிபதியை வரவேற்றனர்.


தொடர்ந்து காரில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். 


ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


మరింత సమాచారం తెలుసుకోండి: