அதிமுக டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நாஞ்சித் சம்பத் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் இருந்து வெளியே வந்த தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் முன்னே தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் வார்தா புயலை காட்டிலும் மிக வேகமாக புயல் வீசியது.

தினகரனை நம்பி தாங்கள் இல்லை என்று ஜெயக்குமார் கூறியிருந்தார். ஆனால் தினகரனுக்கு இதுவரை 31 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தெரிவித்து கொண்டு வருகின்றனர். இதனால் எடப்பாடி அரசு கவிழும் நிலை ஏற்படலாம் என்று அரசியல் நோக்காளர்கள் கருதுகின்றனர்.
ஓ.பன்னீர் செல்வம் ஒரு பச்சை துரோகி. தங்களால் ஆட்சி கவிழாது என்று தான் செய்த தவறுக்கு ஓபிஎஸ் பிராயசித்தம் தேடுகிறார். டிடிவி தினகரன் வித்தியாசமான தலைவர். தள்ளிபோட முடியாத தாகம், தாண்ட முடியாத அகழி, அணைக்க முடியாத நெருப்பு என்றார் நாஞ்சில் சம்பத்.
click and follow Indiaherald WhatsApp channel