ரஜினி மற்றும் கமல் வெறியான ரசிகர்களை அதிமுகவுக்கு எதிராகத் திருப்ப திமுக மேலிடத்திலிருந்து மாவட்ட அளவிலான நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவுகள் சரமாரியாக பறந்துள்ளதாக நெருங்கிய கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரோ இல்லையோ அவரது பெரும் கூட்ட ஒட்ட் மொத்த ரசிகர்களை தங்கள் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் திமுக மிகவும் உறுதியாக உள்ளதாம்.

கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று புதிதாக உருவாகி, திமுகவின் வாக்குகளை அது கபளீகரம் செய்து, அதிமுகவே மீண்டும் சிம்மாசனத்தில் ஆட்சியமைக்க உதவியதைப் போல இப்போ அரசியலில் ரஜினி இறங்கி வாக்குகளைப் பிரித்து தங்களுக்கு எதிரான சூழல் உருவாகிவிடக் கூடாது என்பதில் திமுக மிகத் தெளிவாக உள்ளது.
ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளை மாவட்ட திமுக செயலாளர்கள் அணுகி,அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய தொடங்கியுள்ளார்களாம். நிதி உதவியோ அல்லது வேறு எந்த வகை உதவியாக இருந்தாலும் செய்து தரத் தயார் என்று கூட்டத்தில் உறுதியளித்துள்ளனர். இதனால் ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகள் படு குஷியில் உள்ளனராம். திமுகவின் குறிக்கோள் ஒன்றுதான். ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும் ரஜினி ரசிகர் வாக்குகளைக் கொத்தாக எடுத்துவிலாம். ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தாலும், அவரது ரசிகர்மன்றத்தினர், திமுகவிடம்தான் அதிகம் விசுவாசமாக இருப்பார்கள் என்பதுதான் திமுக தலைமை திட்டமாம். குறைந்தபட்சம் மறைமுகமாவது வேறு வகையிலாவது உதவுவார்கள் என நினைக்கிறது திமுக.
click and follow Indiaherald WhatsApp channel