சருமத்தை மென்மையாகவும், அழகாகவும் வைத்து கொள்ள சில குறிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அவற்றை இப்போது நாம் பார்க்கலாம். 


1. கசகசாவை, பாசி பருப்புடன் அரைத்து, தேய்த்து குளித்து வந்தால் உடல் மென்மையாகவும், அழகாகவும் இருக்கும்.


2. சிறிது தேன் உடன் முட்டையின் வெள்ளை கரு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை கலந்து, முகம் மற்றும் கை கால்களில் 15 நிமிடம் தடவி கழுவி வந்தால், சருமம் பட்டு போல் மென்மையாக ஜொலிக்கும்.


3. சிறிதளவு வெண்ணெயுடன், தேன் கலந்து, வாரம் ஒரு முறை உடல் முழுதும் பூசி வந்தால் தோல் சொரசொரப்பு சரியடையும்.


4. மஞ்சள் மற்றும் கடலை மாவு இரண்டையும் சமளவு கலந்து, உடல் முழுவதும் பூசி வந்தால் தோல் பளபளப்பாக இருக்கும். 


5. பப்பாளி பழத்துண்டுகளை மிக்சியில் மையாக அரைத்து கொண்டு, அதனுடன் லெமன் சாறு சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து வந்தால், கருமை மாறும்.



మరింత సమాచారం తెలుసుకోండి: