மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளை கண்டறிந்து பதில் கூறிய 4-ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய , வியட்நாம் லாவோஸ் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும்இளம் சாதனையாளர்களுக்கு ஆசியா சாதனையாளர்கள் புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர்கள்விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

 

இதன் மூலம் இளம் சாதனையாளர்களிடம் கண்டறியப்படாத அறிவையும், திறமையையும் இந்த உலகம் அறியச்செய்யும் வகையில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆசியா சாதனையாளர் புத்தகம் என்பது உலக சாதனையாளர்கள் பல்கலைக்கழகத்தின் ஒரு சார்பு நிறுவனம் ஆகும்.

 

ஆசிய சாதனையாளர் புத்தகம் நிறுவனம் சார்பில் சென்னை பெருங்குடியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் இளம் சாதனையாளருக்கான போட்டி நடத்தப்பட்டது. நடுவர் விவேக் நாயர் முன்னிலையில் நடை பெற்ற இந்த போட்டியில் ருவந்திகா மாரி என்ற 4-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் கம்ப்யூட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவ விஞ்ஞான 50 பிரிவுகளை சரியாக கண்டறிந்து பதில் அளித்துள்ளார். இதையொட்டி மாணவி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதைத்தொடர்ந்து மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீபா செய்திருந்தார். மருத்துவ விஞ்ஞானத்தில் 50 பிரிவுகளை கண்டறிந்து பதில் கூறிய 4-ம் வகுப்பு மாணவி ருவந்திகா மாரிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய , வியட்நாம் லாவோஸ் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இளம் சாதனையாளர்கள்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சாதனையாளர்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும்இளம் சாதனையாளர்களுக்கு ஆசியா சாதனையாளர்கள் புத்தகம் சார்பில் இளம் சாதனையாளர்கள்விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

 

இதன் மூலம் இளம் சாதனையாளர்களிடம் கண்டறியப்படாத அறிவையும், திறமையையும் இந்த உலகம் அறியச்செய்யும் வகையில் புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. ஆசியா சாதனையாளர் புத்தகம் என்பது உலக சாதனையாளர்கள் பல்கலைக்கழகத்தின் ஒரு சார்பு நிறுவனம் ஆகும்.

 

ஆசிய சாதனையாளர் புத்தகம் நிறுவனம் சார்பில் சென்னை பெருங்குடியில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் இளம் சாதனையாளருக்கான போட்டி நடத்தப்பட்டது. நடுவர் விவேக் நாயர் முன்னிலையில் நடை பெற்ற இந்த போட்டியில் ருவந்திகா மாரி என்ற 4-ம் வகுப்பு மாணவி கலந்து கொண்டு ஒரு நிமிடத்தில் கம்ப்யூட்டரில் காட்சிப்படுத்தப்பட்ட மருத்துவ விஞ்ஞான 50 பிரிவுகளை சரியாக கண்டறிந்து பதில் அளித்துள்ளார். இதையொட்டி மாணவி அனைவரின் பாராட்டையும் பெற்றார். அதைத்தொடர்ந்து மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீபா செய்திருந்தார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: