இன்று கேரளாவில், மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.  திருவோணம் அன்று விரதம் இருப்பதனால், என்ன பலன் கிடைக்கும் என்பதை நாம் இப்போது விரிவாக பார்க்கலாம். 


கேரள மாநிலத்தில், இன்று மக்கள் தங்கள் வீட்டில், மரத்தாலான திருக்காட்கரை அப்பன் சிலை வைத்து வழிபாடு நடத்துவர். மேலும், இன்று விஷ்ணு கடவுளை வணங்கி, அவரது துதிப்பாடல்கள் மற்றும் புராணங்களை படிப்பர். 


பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இதோடு, சாமிக்கு படைக்கும் உணவு பண்டங்களை ஒரு நேரம் சாப்பிட்டு, விரதம் இருக்கலாம். மேலும் வீட்டில் நெய் தீபம் ஏற்றி, விஷ்ணுவை வழிபடுவது மிகவும் நல்லது. 


திருவோணம் அன்று விரதம் இருந்தால், வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும்.  குழந்தை பேரு அடையாதவர்களுக்கு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு மலரும். திருமணம் ஆகாத பெண்களுக்கு, விரைவில் திருமணம் கை கூடும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: