லக்னோ:
சமோசா செலவே இவ்வளவா... அடப்பாவிங்களா? இந்த செலவுத்தொகையில் ஒரு மினி பட்ஜெட்டே போட்டு இருக்கலாமே என்று மக்கள் நொந்து கொள்கின்றனர். இருக்காதா பின்னே...


உ.பி.,யில் கடந்த 4 ஆண்டுகளில் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு தரும் சமோசாக்களுக்கு மட்டும் ரூ.8.78 கோடி செலவு செய்ததாக உ.பி., சட்டசபையில் முதல்வர் அகிலேஷ் யாதவே தெரிவித்ததுதான் தற்போதைய பரபரப்புக்கு காரணம் ஆகியுள்ளது.


இதுகுறித்து சட்டசபையில் அவர் தெரிவித்ததாவது: அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு டீ, சமோசா, குலோப்ஜாமூன் வாங்கித் தர நாளொன்றுக்கு ரூ.2,500 ஒதுக்கப்படுகிறது. (எங்க சம்பளம்... நாள் ஒன்றுக்கு 100ரூபாயை தாண்டலையே முதல்வரேன்னு மக்கள் குமுறுகிறார்கள்.) அமைச்சர் வெளி மாநிலங்களுக்கு செல்லும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் ஒதுக்கப்படும்.


இந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.8.78 கோடி என்று தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்சமாக சமூக நலத்துறை அமைச்சர் அருண் குமார் கோரி ரூ.22.93 லட்சம் (ரூ.22,93,800) செலவு செய்துள்ளார். இதற்கடுத்தபடியாக முகமது ஆஸம் கான் ரூ.22.86 லட்சமும் (ரூ.22,86,620), கைலாஷ் சவுராசியா ரூ.22.85 லட்சமும் (ரூ.22,85,900) செலவு செய்துள்ளனர். பொதுப்பணித் துறை அமைச்சர் சிவ்பால் யாதவ் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. (ரொம்ப... நல்லவரா இருக்காரே).


டீ, சமோசாவுக்காக அமைச்சர்கள் ரூ.8.78 கோடி செலவிட்டுள்ளதாக தகவல் வெளியானது, உ.பி., முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: