சென்னை:
ஆட்டம், இயக்கம், நடிப்புன்னு எல்லா டிபார்ட்மென்டிலும் கலக்கிய நம்ம பிரபுதேவா இப்ப தமிழ்ல வெகுகாலத்திற்கு பிறகு நடிச்சிருக்கிற படமட் தேவி. இதுதான் தெரியுமேன்னு முந்திக்கக்கூடாது. இனிமேதான் இருக்கு விஷயமே.


பிரமாண்ட வெற்றிப்படம் பாகுபலி, தி ஜங்கிள் புக் போன்ற படங்களை வெளியிட்டு கலெக்சன் அள்ளிய குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்தான் இப்போ விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி படத்தை வெளியிட இருக்கிறதாம். பெரிய பிளாட்பார்ம் கிடைத்துள்ளதால் படத்தின் பிரமோஷன் எங்கேயோ போய்விடும் என்று கோலிவுட்டில் கூறுகிறார்கள்.


இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில்கூ றுகையில், தேவி படத்தில் இணைவது ரொம்ப சந்தோஷமாக இருக்கு. தமிழ் பதிப்பை வெளியிடுவதோடு, மலையாளத்தில் படத்தை டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளோம் என்றனர். அப்ப ஒரே கல்லில் 2 மாங்கா... செய்யுங்க... நடத்துங்க... வரும் செப்டம்பர் மாதம் படம் திரைக்கு வருதாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: