சென்னை:
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருந்து நேற்று இரவு வரை போலீசாருக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் சொல்லி மாளாத ஒன்று. விசாரணை செய்யவில்லை. தெளிவான நடவடிக்கைகள் இல்லை என்று பல்வேறு தரப்பில் இருந்தும் போலீசாருக்கு கண்டனங்கள்.


ஆனால் வழக்கை கையில் எடுத்து கொண்ட நாள் முதல் போலீசார் கடும் முயற்சிகளும், பல்வேறு தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர். அதனால்தான் ஒரு வார காலத்தில் இந்த கொலை வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. 


கொலையாளி... யார்... எங்கிருந்து வந்தான் என்பதில் இருந்து ராம்குமார் கைது செய்யப்பட்டது வரை போலீசாரின் நடவடிக்கைகளை பார்ப்போமா?


நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து சுவாதி கொலை செய்யப்படுகிறார். கொலை செய்த நபர் எஸ்கேப் ஆகிவிட்டார். யார் அவர் என்பது தெரியாத நிலை நீடிப்பு.


கொலையாளி தப்பி செல்லும் காட்சிகள் ரயில் நிலையம் அருகில் உள்ள வீட்டின் சிசிடிவி காமிராக்களில் பதிவானதை போலீசார் கண்டு பிடிக்கின்றனர். ஆனால் படம் தெளிவாக இல்லாத நிலை. 


கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசாருக்கு தடுமாற்றம். 


இந்த வழக்கில் நீதிமன்றம் தலையீட்டு குற்றவாளியை விரைந்து கைது செய்ய நெருக்கடி கொடுக்கிறது. விசாரணையை முடுக்கி விடும் வகையில் 10 தனிப்படைகள் அமைக்கப்படுகிறது.


சுவாதியின் நண்பர்கள், உடன் வேலை பார்த்தவர்கள், குடும்பத்தினர் என சின்ன துப்பு கிடைக்குமா என்று போலீசார் தீவிர விசாரணை.
இதற்கிடையில் சுவாதியின் செல்போன் 10 நிமிடங்கள் மட்டும் ஆன் செய்யப்பட்டு ஆப் செய்யப்பட்டுள்ளதை போலீசார் கண்டறிகின்றனர். அது சூளைமேடு பகுதி என்று தெரிகிறது.


அந்த பகுதியில்ஒ ரு தனிப்படை போலீசார் கம்ப்யூட்டர் மூலம் வரையப்பட்ட குற்றவாளியின் புகைப்படத்தை கொண்டு வீடு வீடாக சென்று விசாரணை.


இந்த விசாரணையில் கிடைத்த தகவல்தான் ராம்குமாரை கைது செய்ய பேருதவி செய்துள்ளது. சுவாதி வீடு அருகில் இருக்கும் மேன்சன் ஒன்றின் வாட்ச்மேனிடம் போலீசார் நேற்று விசாரிக்கின்றனர்.


மேன்சனில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் ஒருவாரமாக அறைக்கு வரவில்லை என்ற தகவல் கிடைக்க சுதாரித்த போலீசார்னை உடனே அவரது அறையின் பூட்டை உடைத்து சோதனை நடத்துகின்றனர்.


அறையில் அவரது வீட்டு முகவரி உட்பட  இளைஞரை பற்றி கூடுதல் தகவல்களை கிடைக்கிறது. அதுதான் ராம்குமாரின் சொந்த ஊரான செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமம்.


உடன் அங்கு விரையும் தனிப்படையினர் தங்களை யார் என்று காட்டிக்கொள்ளாமல் ராம்குமார் வீட்டை கண்காணிக்க... ஆடுகளுடன் வெளியில் வரும் ராம்குமார் அருகில் உள்ள பகுதிக்கு ஆடுகளுடன் செல்கிறார். 


அவருக்கு தெரியாமல் அவரை பாலோ செய்து புகைப்படம் எடுத்து சென்னைக்கு அனுப்பி சிசிடிவில் பதிவான புகைப்படத்துடன் போலீசார் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். இருவரும் ஒருவர்தான் என்று சந்தேகமில்லாமல் தெரியவருகிறது. 


காலை  நேரத்தில் கிராமப்பகுதியில் சென்று ராம்குமாரை கைது செய்தார் பிரச்னைகள் எழலாம். அவன் தப்பிக்க வாய்ப்புள்ளதால் போலீசார் தீவிர ஆலோசனை.


பின்னர் நள்ளிரவில் வந்து கைது செய்ய முடிவு எடுக்கும் தனிப்படை போலீசார் தென்காசி போலீசாருடன் இணைந்து ஆக்சனில் குதிக்கின்றனர்.


ராம்குமார் வீட்டை போலீசார் ரவுண்டு கட்டி கொள்ள முன்புற கதவு தட்டப்படுகிறது. கதவை திறக்கும் ராம்குமாரின் தந்தை போலீசாரை பார்த்து போலீஸ் எதற்கு வந்துள்ளது என்று சத்தமாக கேட்க... வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் தான் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதை உணர்ந்து தப்பிக்க முயற்சி.



Find out more: